மோரீஷஸ் நாட்டு கடலோர காவல் படைக்கு இந்திய கடற்படையின் டார்னியர் விமானம்

பயணிகள் ரக டார்னியர் விமானம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் மோரீஷஸ் நாட்டு கடலோர காவல் படைக்கு இந்திய கடற்படை வழங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பயணிகள் ரக டார்னியர் விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில்  பங்கேற்ற மோரீஷஸ் நாட்டின் உயரதிகாரிகள்.
பயணிகள் ரக டார்னியர் விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில்  பங்கேற்ற மோரீஷஸ் நாட்டின் உயரதிகாரிகள்.

புது தில்லி: பயணிகள் ரக டார்னியர் விமானம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் மோரீஷஸ் நாட்டு கடலோர காவல் படைக்கு இந்திய கடற்படை வழங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மோரீஷஸ் தேசிய கடலோர காவல் படைக்கு, மீட்புப் பணி, தேடல், கண்காணிப்பு, கரோனா நோய்த்தொற்று அவசரகாலப் பணிகள் போன்றவற்றில் ஈடுபட குறைந்த வேகத்தில் செல்லும் டார்னியர் விமானம் தேவைப்பட்டது. இந்திய பாதுகாப்புப் படைகளில் வெற்றிகரமாகச் செயல்படும் இந்த டார்னியர் விமானத்தை மோரீஷஸ் கோரியது. 

இதைக் கருத்தில் கொண்டு இந்தியக் கடற்படையால் மோரீஷஸ் நாட்டின் காவல் துறைக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு விமானம் வழங்கப்பட்டுள்ளது. மோரீஷஸ் நாட்டில் திங்கள்கிழமை (செப்.13) நடைபெற்ற நிகழ்ச்சியில் பயணியர் ரக டார்னியர் விமானம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியா, மோரீஷஸ் நாடுகளுக்கிடையே உள்ள கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நல்லுறவு உள்ளது. இதனால் இந்தத் தீவில் அவசரகாலப் பணிகளுக்கு விமானத் தேவை அதிகரித்து வரும் நிலையில் மோரீஷஸ் நாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில் எம்எஸ்என் 4059 விமானம் அந்ந நாட்டின் காவல் படைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் புதிதாக நவீன ரக பயணியர் டார்னியர் விமானத்தை மோரீஷஸ் நாட்டுக்காகத் தயாரித்து வருகிறது. இது அடுத்த ஆண்டு வழங்கப்படும். 

இந்த விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மோரீஷஸ் நாட்டின் போக்குவரத்து, வெளியுறவு விவகாரம், பிராந்திய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஆலன் கனூ, இந்திய தூதர் நந்தினி கே சிங்லா, காவல் துறை ஆணையர், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com