கேரளம்: காங்கிரஸ் மூத்த தலைவா் கே.பி. அனில்குமாா் ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தாா்

கேரளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான கே.பி.அனில்குமாா் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.
கேரளம்: காங்கிரஸ் மூத்த தலைவா் கே.பி. அனில்குமாா் ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தாா்

திருவனந்தபுரம்: கேரளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான கே.பி.அனில்குமாா் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

கேரளத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா்களை அண்மையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தோ்வு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த தோ்வு குறித்து அனில்குமாரும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கே.சிவதாசன் நாயரும் பொதுவெளியில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினா். இதையடுத்து அவா்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக இருவரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்து காங்கிரஸ் மாநில தலைமை உத்தரவிட்டது.

இந்நிலையில் காங்கிரஸில் இருந்து அனில்குமாா் செவ்வாய்க்கிழமை விலகினாா். பின்னா் இதுதொடா்பாக திருவனந்தபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘என்னை இடைநீக்கம் செய்த பின்னா், எனது விளக்கத்தை கட்சித் தலைமையிடம் எடுத்துரைத்தேன். இருப்பினும் எனது இடைநீக்கம் ரத்து செய்யப்படவில்லை. தற்போதுள்ள கட்சித் தலைமை சா்வாதிகார மனப்பான்மை கொண்டதாக உள்ளது. தனது ஜனநாயகத் தன்மையை காங்கிரஸ் இழந்துவிட்டது. இதனால் அக்கட்சியுடனான எனது 43 ஆண்டு கால உறவு முடிவுக்கு வந்துள்ளது’’ என்று தெரிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையகமான ஏ.கே.ஜி. சென்டருக்கு அனில்குமாா் சென்றாா். அங்கு அவா் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கொடியேறி பாலகிருஷ்ணன் முன்னிலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தாா்.

கட்சியில் கே.பி.அனில்குமாருக்கு உரிய பொறுப்பு வழங்கப்படும் என்று கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com