பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டடங்களை நாளை(செப்.16) திறந்து வைக்கிறார் மோடி

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி(கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி(கோப்புப்படம்)

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார்.

தில்லி கஸ்தூரி பாய் மார்க் மற்றும் ஆப்ரிக்கா அவென்யு பகுதியில் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை என முப்படைகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைச்சக அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களில் ஒரே நேரத்தில் 7,000 அதிகாரிகள் பணி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்திற்கான திறப்பு விழாவில் பங்குபெற்று பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். மேலும், பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோடி கலந்துரையாடவுள்ளார்.

இந்த நிகழ்வில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர், முப்படைகளின் தளபதிகள், ஆயுதப்படைகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com