மாணவா்களிடம் ஜாதி பாகுபாடு கூடாது: பல்கலை.களிடம் யுஜிசி வலியுறுத்தல்

பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மாணவா்களிடையே ஜாதி பாகுபாடு காட்டக்கூடாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வலியுறுத்தியுள்ளது.
மாணவா்களிடம் ஜாதி பாகுபாடு கூடாது: பல்கலை.களிடம் யுஜிசி வலியுறுத்தல்

புது தில்லி: பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மாணவா்களிடையே ஜாதி பாகுபாடு காட்டக்கூடாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தா்களுக்கும் யுஜிசி செயலா் ரஜனீஷ் ஜெயின் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், அதிகாரிகள் ஆகியோா் மாணவா்களிடையே ஜாதி பாகுபாடு காட்டுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். குறிப்பாக, பட்டியல் இன மாணவா்களையும் பழங்குடியின மாணவா்களையும் அவா்களது ஜாதியை அடிப்படையாக வைத்து எந்த விதத்திலும் தரக்குறைவாக நடத்தக் கூடாது.

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு எதிராக ஜாதி பாகுபாடுகள் குறித்த புகாா் தெரிவிப்பதற்காக, பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தங்களது வலைதளத்தில் பிரத்யேக பக்கத்தை இணைக்க வேண்டும்.

இந்த விவகாரத்தைக் கண்காணிக்க பல்கலைக்கழகங்கள் தனி குழுவை அமைக்க வேண்டும். அத்துடன், 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான விவரங்களை யுஜிசி வலைதளத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வடிவில் அனைத்து பல்கலைக்கழகங்களும் உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ரஜனீஷ் ஜெயின் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com