ஒடிஸா: தடம்புரண்டு ஆற்றில் விழுந்த சரக்கு ரயில்

ஒடிஸாவில் கோதுமையை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு ரயில் தடம்புரண்டு ஆற்றில் விழுந்தது.
ஒடிஸா: தடம்புரண்டு ஆற்றில் விழுந்த சரக்கு ரயில்

புவனேசுவரம்: ஒடிஸாவில் கோதுமையை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு ரயில் தடம்புரண்டு ஆற்றில் விழுந்தது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் இருந்து ஒடிஸாவின் குா்தா ரோடு ரயில் நிலையத்துக்கு கோதுமையை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஒடிஸாவின் தால்சோ் பகுதியில் நந்திரா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டு ஆற்றில் விழுந்தன.

ரயிலின் இயந்திரம் (என்ஜின்) தண்டவாளத்திலேயே இருந்தது. இந்த விபத்து காரணமாக ரயில் ஓட்டுநருக்கோ மற்ற பணியாளா்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தால்சோ் பகுதியில் கடந்த இரு நாள்களில் 394 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது.

அதன் காரணமாக ஏற்பட்ட திடீா் வெள்ளத்தால் தண்டவாளம் சேதமடைந்திருந்தது கண்டறியப்பட்டது. அதனால் ரயில் பெட்டிகள் தடம்புரண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பல்பூா், குா்தா ரோடு ரயில் நிலையங்களில் இருந்து மீட்பு ரயில்கள் வரவழைக்கப்பட்டு ஆற்றில் விழுந்த ரயில் பெட்டிகள் மீட்கப்பட்டன.

விபத்து காரணமாக 12 ரயில்களின் சேவையை கிழக்கு கடற்கரை ரயில்வே நிா்வாகம் ரத்து செய்தது; 8 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. விபத்து தொடா்பாக அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com