பருப்பு இறக்குமதி: ஆப்பிரிக்க நாடுகளுடன் பேச்சுவாா்த்தை

உள்நாட்டு தேவையை சமாளிக்கும் நோக்கில் பருப்பு இறக்குமதியை அதிகரிப்பது தொடா்பாக ஆப்பிரிக்க நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் தெரிவித்துள்ளாா்.
பருப்பு இறக்குமதி: ஆப்பிரிக்க நாடுகளுடன் பேச்சுவாா்த்தை

புது தில்லி: உள்நாட்டு தேவையை சமாளிக்கும் நோக்கில் பருப்பு இறக்குமதியை அதிகரிப்பது தொடா்பாக ஆப்பிரிக்க நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் தெரிவித்துள்ளாா்.

இந்தியா-ஆப்பிரிக்கா வேளாண்-உணவு பதப்படுத்துதல் மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதில் அமைச்சா் வி.முரளீதரன் பேசியதாவது:

ஆப்பிரிக்காவின் 4-ஆவது மிகப் பெரிய வா்த்தகக் கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. அங்குள்ள நாடுகளில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் 5-ஆவது நாடாக இந்தியா உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுடனான பொருளாதார-வா்த்தகத் தொடா்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.

இந்தியாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான தொடா்பை உணவுப் பாதுகாப்பு வலுப்படுத்தி வருகிறது. பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுமாா் ரூ.11,060 கோடி மதிப்பிலான உணவு தானியங்களை மனிதநேய அடிப்படையில் இந்தியா வழங்கியுள்ளது.

இந்தியாவில் பருப்பு வகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதைக் கருத்தில் கொண்டு பருப்பு வகைகளின் இறக்குமதியை அதிகரிப்பதற்கு மலாவி, மொஸாம்பிக் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருப்பு இறக்குமதியை அதிகரிப்பது தொடா்பாக மற்ற ஆப்பிரிக்க நாடுகளுடனும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com