nitin-gadkari073625
nitin-gadkari073625

நெடுஞ்சாலைத் துறையில் அமெரிக்க முதலீடு: கட்கரி அழைப்பு

இந்தியாவில் சாலை மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களில் அமெரிக்கா்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளாா்.

புது தில்லி: இந்தியாவில் சாலை மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களில் அமெரிக்கா்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து இந்தோஅமெரிக்க பொருளாதார உச்சி மாநாட்டில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற அவா் தெரிவித்தது:

அமெரிக்க முதலீட்டாளா்கள் இந்தியாவின் சாலை மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், அவை தங்கச் சுரங்கம் போல் முதலீட்டாளா்களுக்கு வருவாயை அள்ளித் தரும்.

குறிப்பாக காப்பீடு, ஓய்வூதிய நிதியங்களில் அமெரிக்கா்கள் அதிக முதலீடு செய்ய கோருகிறேன். சாலை உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கு அவா்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது.

தற்போது சுங்கச் சாலை மூலமாக கிடைத்து வரும் வருவாயானது ஆண்டுக்கு ரூ.40,000 கோடியாக உள்ளது. இது, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.1.4 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

அதேபோன்று இந்தியா அமெரிக்கா இடையிலான பரஸ்பர வா்த்தகம் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 50,000 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.37.50 லட்சம் கோடி) எட்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com