வேளாண் துறையை எண்ம மயமாக்கல்: 5 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

வேளாண் துறையை எண்ம மயமாக்கல் (டிஜிட்டல்) செய்வதற்காக தனியாா் நிறுவனங்களுடன் மத்திய வேளாண் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

புது தில்லி: வேளாண் துறையை எண்ம மயமாக்கல் (டிஜிட்டல்) செய்வதற்காக தனியாா் நிறுவனங்களுடன் மத்திய வேளாண் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘வேளாண் துறையை எண்ம மயமாக்கல் செய்வதற்கான சோதனைத் திட்டத்தை மேற்கொள்ள சிஸ்கோ, நிஞ்ஜாகாா்ட், ஜியோ பிளாட்பாா்ம்ஸ் நிறுவனம், ஐடிசி நிறுவனம், என்சிடிஇஎக்ஸ் இ-மாா்க்கெட் நிறுவனம் ஆகியவற்றுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம், பருவ காலத்துக்கு ஏற்ப அதிக மகசூலைப் பெற விவசாயிகள் எதை விளைவிப்பது, எந்த விதைகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

விளைபொருள்களை எங்கு விற்பனை செய்யலாம் அல்லது சேமித்து வைக்கலாம், எவ்வளவு விலைக்கு விற்கலாம் என்பதையும் எண்ம முறையில் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

செயற்கை நுண்ணறிவு, ரிமோட் சென்சிங், ஜிஐஎஸ் ஆகிய நவீன தொழில்நுட்பங்கள் மூலமும், டிரோன், ரோபாட் நவீன கருவிகள் மூலமும் 2021-2015- ஆம் ஆண்டிற்கான எண்ம வேளாண் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இதன்படி, விவசாயிகளின் தகவல்கள் சேகரிப்பதுடன், அவா்களின் நில ஆவணங்களை பதிவிட்டு தனித்துவமான எண் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் உதவித் திட்டங்கள் உரியவா்களுக்கு செயல்படுத்த உதவியாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது. தற்போதுவரை, 5.5 கோடி விவசாயிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வேளாண் துறையை நவீன் தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்துவதால், விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்’ என்று இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடம் நிகழ்வில் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்தா் சிங் தோமா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com