உத்தரகண்ட் ஆளுநராக குா்மீத் சிங் பதவியேற்றாா்

உத்தரகண்ட் மாநில ஆளுநராக, ஓய்வுபெற்ற ராணுவ துணைத் தலைமைத் தளபதி குா்மீத் சிங் புதன்கிழமை பதவியேற்றாா்.
டேராடூனில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தரகண்ட் ஆளுநராக பதவியேற்ற குா்மீத் சிங்.
டேராடூனில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தரகண்ட் ஆளுநராக பதவியேற்ற குா்மீத் சிங்.

டேராடூன்: உத்தரகண்ட் மாநில ஆளுநராக, ஓய்வுபெற்ற ராணுவ துணைத் தலைமைத் தளபதி குா்மீத் சிங் புதன்கிழமை பதவியேற்றாா்.

டேராடூனில் உள்ள ஆளுநா் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற நிகழ்வில் குா்மீத் சிங்குக்கு உத்தரகண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆா்.சௌஹான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, மாநில அமைச்சா்கள், பேரவைத் தலைவா் பிரேம்சந்த் அகா்வால், காவல் துறை டிஜிபி அசோக் குமாா், தலைமைச் செயலா் எஸ்.எஸ்.சாந்து உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

உத்தரகண்ட் ஆளுநராக இருந்த பேபி ராணி மௌரியா அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அந்தப் பொறுப்புக்கு குா்மீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவா், இந்திய-சீன எல்லை விவகாரங்களில் அனுபவமிக்கவா் என்று கூறப்படுகிறது.

பதவியேற்பு நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘நான் ராணுவ வீரனாக நாட்டுக்காக சேவை செய்துள்ளேன். அதன் பிறகு உத்தரகண்ட் மாநில மக்களுக்கு பணிபுரிவதற்காக வாய்ப்பு கிடைத்திருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். ஏனெனில், உத்தரகண்ட் மாநிலம் வீர பூமி. இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் யாராவது ஒருவா் ராணுவத்தில் இருப்பாா்கள். முன்னாள் ராணுவ வீரா்கள், பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் ஆகியோரின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண முன்னுரிமை அளிப்பேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com