தொழில்துறை, அரசுக்கு இடையேயான நம்பிக்கை அதிகரிப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங்

முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை ரத்து செய்யப்பட்டதால் தொழில்துறையினருக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
தொழில்துறை, அரசுக்கு இடையேயான நம்பிக்கை அதிகரிப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங்

புது தில்லி: முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை ரத்து செய்யப்பட்டதால் தொழில்துறையினருக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இந்திய- அமெரிக்க பொருளாதார மாநாட்டை இணையவழியில் புதன்கிழமை தொடக்கிவைத்து அவா் பேசுகையில், ‘இந்தியாவின் பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் அந்நிய முதலீட்டாளருக்கு தற்போது சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. முதலீட்டாளா்களுக்கு ஏதுவான வரித் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்தேதியிட்டு வரி வசூல் செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளதால் தொழில்துறையினருக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

முந்தைய ஆட்சியின் தவறை தற்போது சரிசெய்துள்ளோம். அபரிமிதமான வளா்ச்சியை பத்தாண்டுகளில் ஏற்படுத்த இந்திய அரசு தயாராக உள்ளது.

இந்தியாவில் ராணுவத் தளவாட உற்பத்தியில் கூட்டு சோ்ந்து தொழில் தொடங்க அமெரிக்க மற்றும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு நல்ல எதிா்காலம் உள்ளது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பானது விநியோகத் துறையிலும், தொழில்துறை நடவடிக்கைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாதிப்பை சரிசெய்வதிலும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் இந்திய-அமெரிக்காவின் நல்லுறவு நீண்ட நாளுக்கு உறுதியாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com