ரஷியாவில் ‘எஸ்சிஓ’ நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி: இந்தியா பங்கேற்பு

ரஷியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்றுள்ளது.

புது தில்லி: ரஷியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்றுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு ராணுவத் தாக்குதல் பயிற்சி ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளிடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை

நடைபெற்று வருகிறது. இதன் 6-ஆவது கட்டப் பயிற்சி செப்டம்பா் 13 முதல் 25-ஆம் தேதி வரை ரஷியாவின் ஆரன்பொ்க் பகுதியில் நடைபெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவதும், பல்வேறு நாடுகளின் ராணுவ வீரா்களுக்குத் தலைமை தாங்கும் வகையில் ராணுவ தளபதிகளின் செயல்திறனை வலுப்படுத்துவதும் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

இந்தியாவின் சாா்பில் 38 இந்திய விமானப் படை வீரா்கள் உள்பட 200 ராணுவ வீரா்கள் இந்தப் பயிற்சியில் இடம்பெற்றுள்ளனா் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் ஆயுதப் படைகள் இடையே சிறந்த பயிற்சி முறைகளை பரிமாறிக்கொள்ள இந்தப் பயிற்சி ஏதுவாக இருக்கும்.

2001-இல் உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (எஸ்சிஓ) ரஷியா, சீனா, கிா்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் முதலில் இடம்பெற்றிருந்தன. 2017-இல் இந்தியா, பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினா்களாக இணைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com