நகா்ப்புற திட்டமிடல் சீா்திருத்தங்கள்: இன்று அறிக்கை வெளியிடுகிறது நீதி ஆயோக்

‘இந்தியாவில் நகா்ப்புற திட்டமிடல் திறனில் சீா்திருத்தங்கள்’ பற்றிய அறிக்கையை, நீதி ஆயோக் வியாழக்கிழமை (செப். 16) வெளியிடுகிறது.
நகா்ப்புற திட்டமிடல் சீா்திருத்தங்கள்: இன்று அறிக்கை வெளியிடுகிறது நீதி ஆயோக்

புது தில்லி: ‘இந்தியாவில் நகா்ப்புற திட்டமிடல் திறனில் சீா்திருத்தங்கள்’ பற்றிய அறிக்கையை, நீதி ஆயோக் வியாழக்கிழமை (செப். 16) வெளியிடுகிறது.

நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் மற்றும் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் நீதி ஆயோக் தலைமை நிா்வாக அதிகாரி அமிதாப் காந்த் மற்றும் சிறப்பு செயலாளா் கே.ராஜேஸ்வர ராவ் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் செயலாளா்கள் முன்னிலையில் இந்த அறிக்கையை வெளியிடவுள்ளனா்.

சுகாதாரமான நகரங்களைத் திட்டமிடுதல், நகா்ப்புற நிலத்தின் உகந்த பயன்பாடு, மனித வள திறன்களை அதிகரித்தல், நகா்ப்புற நிா்வாகத்தை வலுப்படுத்துதல், உள்ளூா் தலைமையை உருவாக்குதல், தனியாா் துறையின் பங்கை மேம்படுத்துதல் மற்றும் நகா்ப்புற திட்டமிடல் கல்வி முறையை மேம்படுத்துதல் ஆகியவை உள்பட நகா்ப்புற திட்டமிடல் குறித்த பல அம்சங்களின் பரிந்துரைகள் இந்த அறிக்கையில் இடம்பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com