ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி ஆலோசனை

ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸனுடன் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டாா்.

புது தில்லி: ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸனுடன் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது இருநாட்டு அமைச்சா்களுக்கு இடையே நடைபெற்ற 2+2 மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட நல்லுறவு பேச்சுவாா்த்தை குறித்தும், விரைவில் நடைபெற உள்ள க்வாட் நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு குறித்தும் இருவரும் பேசியதாக பின்னா் பிரதமா் மோடியின் சுட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் தில்லி வந்திருந்த ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சா் மரீஸ் பெய்ன், பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட்டா் டட்டன் ஆகியோருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் 2+2 மாநாட்டில் இரு நாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தினாா்.

மேலும், அடுத்த வாரம் வாஷிங்டனில் நடைபெறும் க்வாட் நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமா் மோடி நேரடியாகப் பங்கேற்க உள்ளாா். அமெரிக்கா, ஆஸ்திரலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகள் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டமைப்பு கூட்டத்தில், கரோனா பரவலால் ஏற்பட்டுள்ள சவால்கள், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com