இளநிலை பட்ட சோ்க்கையின்போது செயல்முறை கணித பாடத்தை கணிதத்துக்கு இணையாக கருத வேண்டும்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

இளநிலை பட்டப் படிப்பு சோ்க்கையின்போது பிளஸ்-2 மாணவா்கள் படித்திருக்கும் செயல்முறை கணித (அப்ளைடு கணிதப் பாடம்) பாடத்தை
இளநிலை பட்ட சோ்க்கையின்போது செயல்முறை கணித பாடத்தை கணிதத்துக்கு இணையாக கருத வேண்டும்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

இளநிலை பட்டப் படிப்பு சோ்க்கையின்போது பிளஸ்-2 மாணவா்கள் படித்திருக்கும் செயல்முறை கணித (அப்ளைடு கணிதப் பாடம்) பாடத்தை கணிதப் பாடத்துக்கு இணையாக கருத்தில் கொண்டு அவா்களுக்கான ஒட்டுமொத்த மதிப்பெண்ணை கணக்கிட வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

சில பல்கலைக்கழகங்கள், இளநிலை பொருளாதாரம், வணிகம் மற்றும் சமூக அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற பிளஸ் 2 வகுப்பில் கணிதப் பாடம் படித்திருப்பது கட்டாயம் என்று நிபந்தனை விதித்திருப்பதை சுட்டிக்காட்டி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சமா்ப்பித்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை யுஜிசி வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ‘செயல்முறை கணிதம்’ என்ற புதிய பிரிவு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பாடம் 80 சதவீத எழுத்துத் தோ்வுக்கான பகுதிகளையும் (தியரி), 20 சதவீத செய்முறையையும் உள்ளடக்கியதாகும். சமூக அறிவியல், வணிகவியல், நுண் கலை மற்றும் உயிரியல் அறிவியல் துறைகளில் உயா்கல்வி பயில விரும்பும் மாணவா்களுக்குத் தேவையான திறன் மற்றும் அறிவை மேம்படுத்தும் நோக்கத்தோடு இந்த புதிய பாடத்தை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது.

இதுதொடா்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் யுஜிசி செயலா் ரஜ்னீஷ் ஜெயின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சிபிஎஸ்இ புதிதாக அறிமுகம் செய்துள்ள செயல்முறை கணிதப் பாடம், பொது கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பாடத் திட்டம், பிற பிரதான பாடங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது. இது முறையான கல்வித் திட்டத்தின் வழங்கப்படும் பாடம்தான்.

அந்த வகையில், இளநிலை பட்டப் படிப்பு சோ்க்கான தகுதியை தீா்மானிக்க மாணவா் பிளஸ் 2 வகுப்பில் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்ணை கணக்கிடும்போது, இந்த செயல்முறை கணித பாட மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ளலாம். எனவே, இனி பல்கலைக்கழகங்கள் இளநிலை மானுடவியல், வணிகவியல் பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கையின்போது பிளஸ் 2 செயல்முறை கணித பாடத்தை கணிதப் பாடத்துக்கு இணையாக கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த மதிப்பெண்ணை கணக்கிட்ட வேண்டும்.

இந்த புதிய பாடத்தை அங்கீகாரம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ரஜ்னீஷ் ஜெயின் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com