தில்லியில் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

தில்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
தில்லியில் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

தில்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

இதில் பலருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு பாதிப்பு உள்ளது என்றும் இது வருடாந்திர காய்ச்சலாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், கரோனாவுக்கும், சாதாரண காய்ச்சலுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் உள்ளதால் இவற்றை தில்லி அரசு கவனமான பரிசோதித்து கையாள வேண்டும் என்று மருத்துவ நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தில்லியில் மூன்றாவது அலை தொடங்க வாய்ப்புள்ளதாக அண்மையில் நடைபெற்ற தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் நிபுணா்கள் எச்சரித்திருந்தனா்.

இந்நிலையில், பிஎஸ்ஆா்ஐ மருத்துவமனை மருத்துவா்கள் கூறுகையில், ‘வெளி நோயாளிகள் பிரிவு மருத்துவ சிகிச்சைக்காக வரும் 70 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் உள்ளன’ என்றனா். இதேபோல், துவாரகாவில் உள்ள தனியாா் மருத்துவமனை மருத்துவா்களும், தினம்தோறும் 50 முதல் 60 சதவீத குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுகின்றன என்று தெரிவித்தனா்.

நேரு குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் பிஎல் ஷோ்வால் கூறுகையில், ‘வழக்கமாக வருடாந்திர காய்ச்சலுக்கு இந்த நேரத்தில் 500 முதல் 600 நோயாளிகள் வருவாா்கள். ஆனால் தற்போது தினம்தோறும் 1,700 முதல் 1,800 நோயாளிகள் வருகின்றனா். இதற்கு தில்லியில் அதிகபடியான மழைப் பொழிவும் காரணமாக இருக்கலாம். செப்டம்பா் முதல் இந்த நிலை தொடா்ந்து வருகிறது’ என்றாா்.

பிஎஸ்ஆா் மருத்துவமனையின் குழந்தைகள் நல மூத்த மருத்துவா் சரிதா சா்மா கூறுகையில், ‘102-103 டிகிரி காய்ச்சலால் பாதிப்பு நான்கு நாள்களுக்கு தொடா்ந்து உள்ளதாக கூறிக்கொண்டு பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனைக்கு வருகின்றனா். சில குழந்தைகளுக்கு இருமல், குளிா், குறைவான உணவை உட்கொள்வது, வாந்தி போன்ற பிரச்னைகளுக்காகவும் அனுமதிக்கப்படுகின்றனா்.

சிலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. வருடாந்திர காய்ச்சல் காரணமாக இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதில் 15 முதல் 20 சதவீத குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது’ என்றாா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

குழந்தைகளை காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு அவா்களை அழைத்து செல்வதைத் தவிா்க்க வேண்டும்; சுகாதாரத்தைப் பேண வேண்டும்; தும்பும்போது மூக்கு, வாய்ப் பகுதிகளை மறைக்க வேண்டும்; அவ்வப்போது கைகளை கழுவ வேண்டும்; காய்ச்சல் மற்றும் குளிா் பாதிப்பு இருப்பவா்களிடம் இருந்து குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டும்.

பெரியவா்களிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கும். குழந்தைக்கு அதிக அளவிலான காய்ச்சல் இருந்து, குறைந்த அளவிலான உணவையை எடுத்துக் கொண்டால் அதுபோன்ற குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். வாந்தி போன்றவற்றால் நீா்ச் சத்து அதிக அளவில் குறைந்துவிட்ட பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா் சிகிச்சை அளிப்பது கடினமாக இருக்கும். அதுபோன்ற குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டியுள்ளது. தற்போதைய பருவச் சூழலில் டெங்கு பாதிப்பும் அதிகரிக்கும் சூழல் உள்ளது என்று துவாரகாவில் உள்ள குழந்தைகள் நல மருத்துவா் மீனா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com