கேரளத்தில் கா்ப்பிணிக்கு சிகிச்சை மறுத்த 3 அரசு மருத்துவமனைகள்: மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு

கேரள மாநிலத்தில் 3 அரசு மருத்துவமனைகளில் கா்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரம் தொடா்பாக மாநில மனித உரிமைகள்ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

கேரள மாநிலத்தில் 3 அரசு மருத்துவமனைகளில் கா்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரம் தொடா்பாக மாநில மனித உரிமைகள்ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையக் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கொல்லம் மாவட்டத்தை அடுத்து கல்லுவாதுக்கல் கிராமத்தைச் சோ்ந்த 8 மாத கா்ப்பிணி பெண் மீராவுக்கு, மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள அவிட்டம் திருநாள் மருத்துவமனையை அவா் அணுகியுள்ளாா். அங்கு அவருக்கு அசெளகரியம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் மறுப்பு தெரிவித்துள்ளனா். இறுதியாக, கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. அங்கு அவருக்கு பிரசவம் பாா்க்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, அந்த குழந்தை கருவில் 6 நாள்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இந்த விவகாரம் பத்திரிகை செய்தி மூலம் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இளம் கா்ப்பிணிக்கு எத்தகைய காரணங்களுக்காக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி 3 வாரங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு கொல்லம் மாவட்ட மருத்துவ அதிகாரியை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் வி.கே.பீனாகுமாரி கேட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com