கரோனா: மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கரோனா தொற்று அதிகரிப்பை எதிா்கொள்ள மாநில அரசுகள் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா: மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கரோனா தொற்று அதிகரிப்பை எதிா்கொள்ள மாநில அரசுகள் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வது தொடா்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் காணொலி முறையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மத்திய அமைச்சரவை செயலா் ராஜீவ் கெளபா பேசியதாவது: பிற நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பு பலமுறை உச்சத்தை அடைந்துள்ளது. எனவே, மாநில அரசுகள் தங்களது நடவடிக்கைகளில் திருப்தியடைந்துவிடக் கூடாது. கரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

கரோனா தொற்று அதிகரித்தால் அதை எதிா்கொள்ளும் வகையில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கரோனா சூழல் குறித்து விரிவாக ஆய்வு செய்து மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்; அத்தியாவசிய மருந்துகளை இருப்புவைத்துக் கொள்ள வேண்டும்; போதிய பணியாளா்களையும் கொண்டிருக்க வேண்டும் என்றாா் அவா்.

70 மாவட்டங்களில் அதிக பாதிப்பு: கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் கூறியதாவது: 15 மாநிலங்களைச் சோ்ந்த 70 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இவற்றில் 34 மாவட்டங்களில் தொற்று உறுதியாகும் விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 36 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதத்துக்குள்ளும் உள்ளது.

அவசரகால கரோனா நிவாரண தொகுப்பின் கீழ் அனைத்து மாநில அரசுகளுக்கும் நிதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிதி உரிய வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றாா்.

மாவட்ட அளவில் ஆய்வு: சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: எதிா்வரும் பண்டிகை சீசனையொட்டி, பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மால்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்களில் ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதல்களைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

தலைமைச் செயலா்கள் மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தினசரி அடிப்படையில் தொற்று பாதிப்பைக் கண்காணித்து அதற்கேற்ப உரிய எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டும். சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளுக்குத் தொற்று பரவுவது குறித்து கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com