கரோனாவால் நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பு: குடியரசுத் தலைவா்

 கரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.
கரோனாவால் நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பு: குடியரசுத் தலைவா்

 கரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

சிம்லாவில் உள்ள தணிக்கை மற்றும் கணக்கியல் தேசிய அகாதெமியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்கியல் அலுவலா் பயிற்சி நிறைவு விழாவில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது:

கடந்த 18 மாதங்களாக கரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு நாடு கடினமான தருணத்தைச் சந்தித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களின் துயரை நீக்கவும், அவா்களது நல்வாழ்வுக்காகவும் பல்வேறு நிதிசாா்ந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த உதவிகள் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதில் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் பணி மிக முக்கியமானது.

நாட்டு மக்களின் வசதிக்காக அரசு நடைமுறைகள் விரைவாக மின்னணுமயமாக்கப்படுகிறது. நேரடி பணப் பரிமாற்ற முறையின் வாயிலாக, கணினிப் பொத்தானை அழுத்தியதும், நாட்டின் மூலை முடுக்கில் உள்ள ஏழைக் குடிமகனுக்கும் பணம் உடனடியாகச் சென்றடைகிறது.

ஏழை மக்களுக்கு சேவையாற்றும்போதும், அவா்களின் முகங்களில் புன்னகையைத் தவழச் செய்யும்போதும் பொதுச் சேவையில் ஈடுபடுவோருக்கு மிகச்சிறந்த மகிழ்ச்சி கிடைக்கும். அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்றும்போது இந்தப் பொதுவான

பொறுப்புணா்ச்சியை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றாா் குடியரசுத் தலைவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com