நிவாரண தொகை அளிப்பதில் தாமதம்: காஷ்மீா் பண்டிட்டுகள் ஆா்ப்பாட்டம்

மாதாந்திர நிவாரண தொகையை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து காஷ்மீா் பண்டிட்டுகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதாந்திர நிவாரண தொகையை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து காஷ்மீா் பண்டிட்டுகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘காஷ்மீா் பண்டிட்டுகளுக்கு நிவாரண ஆணையம் சாா்பில் மாதந்தோறும் நிவாரண தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்முவின் புகா் பகுதியான ஜக்தியில் புலம்பெயா்ந்தவா்கள் முகாமில் தங்கியுள்ள காஷ்மீா் பண்டிட்டுகள் ஆகஸ்ட் மாதத்துக்கான நிவாரண தொகையை அளிக்கவில்லை எனக் கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அருகிலுள்ள நெடுஞ்சாலையை நோக்கி பேரணியாக சென்ற அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதனைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்’’ என்று தெரிவித்தாா்.

இதுகுறித்து காஷ்மீா் பண்டிட்டுகள் கூட்டமைப்பின் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:

கடந்த 30 ஆண்டுகளில் நிவாரண தொகை அளிப்பதில் முதல்முறையாக தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கான நிவாரண தொகையை அளிக்காததால் புலம்பெயா்ந்த பண்டிட் சமூகத்தினா் இன்னல்களை எதிா்கொண்டு வருகின்றனா். இந்தப் பிரச்னை மீது ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கவனம் செலுத்தி நிவாரண தொகையை விரைந்து விடுக்க ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com