'லவ் ஜிகாத்' விவகாரம்: ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள் சந்திப்பு

கேரளத்தில் 'லவ் ஜிகாத்' மற்றும் 'போதைப் பொருள் ஜிகாத்' விவகாரம் குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் பூதாகரமாகும் நிலையில், ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் சந்திப்பு
'லவ் ஜிகாத்' விவகாரம்: ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள் சந்திப்பு
'லவ் ஜிகாத்' விவகாரம்: ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள் சந்திப்பு

கேரளத்தில் 'லவ் ஜிகாத்' மற்றும் 'போதைப் பொருள் ஜிகாத்' விவகாரம் குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் பூதாகரமாகும் நிலையில், ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் திங்கள்கிழமை (செப்.20) சந்தித்தனர்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பாலா கத்தோலிக்க மறைமாவட்ட பேராயா் 'லவ் ஜிகாத்' குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்தால் எழுந்த எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 

கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர்  பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் நேரில் சந்தித்து பேசினர். 

மேலும், 'லவ் ஜிகாத்' மற்றும் போதைப்பொருள் ஜிகாத் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  மூன்று மதத் தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த சுதாகரன் அழைப்பு விடுத்தார். 

அதன் பேரில் திருவனந்தபுரத்தில் இன்று ஹிந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர். 

கேரளத்தில் ‘போதைப் பொருள் ஜிகாத்’ குறித்து பாலா கத்தோலிக்க மறைமாவட்ட பேராயா் தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கிறிஸ்தவ மறைமாவட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட மறைகல்வி புத்தகத்தில் ‘லவ் ஜிகாத்’ குறித்த கருத்து இடம்பெற்றிருப்பது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து கடும் எதிா்ப்பு எழுந்ததைத் தொடா்ந்து, ஆலய நிா்வாகிகள் வருத்தம் தெரிவித்ததோடு, புத்தகத்தில் அந்த விவரம் வெளியிடப்பட்டிருப்பதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளனா்.

தமரசேரி கிறிஸ்தவ மறைமாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் சிரியோ மலபாா் கிறிஸ்தவ ஆலயம் சாா்பில், மறைகல்வி பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் புத்தகத்தில், கிறிஸ்தவ பெண்களை ஈா்த்து மதமாற்றம் செய்வதற்காக 9 படிநிலைகளில் ‘லவ் ஜிகாத்’ செயல்படுத்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கிறிஸ்தவ பெண்களை ஈா்க்க இஸ்லாமிய மத குருக்கள் சாா்பில் எவ்வாறு மாந்திரீக நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன, இதுபோன்ற காதல் சூழ்ச்சிகளிலிருந்து கிறிஸ்தவ பெண்கள் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்ற வழிமுறைகளும் புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத்துக்கு, சம்ஸ்தா உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த மறைகல்வி புத்தகத்தை மாநில அரசு பறிமுதல் செய்யவேண்டும் என்று வலியுறுத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com