எல்லையில் ட்ரோன்களை வீழ்த்த பாதுகாப்புப் படைகளுக்கு புது உத்தரவு

எல்லைப் பகுதியில் பறந்துவரும் ட்ரோன்களை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்டாக்களைச் சுடும் துப்பாக்கிகளை (பிஏஜி) பயன்படுத்துமாறு சிஆர்பிஎப் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம்
எல்லையில் ட்ரோன்களை வீழ்த்த பாதுகாப்புப் படைகளுக்கு புது உத்தரவு

எல்லைப் பகுதியில் பறந்துவரும் ட்ரோன்களை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்டாக்களைச் சுடும் துப்பாக்கிகளை (பிஏஜி) பயன்படுத்துமாறு சிஆர்பிஎப் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லையையொட்டிய தங்கள் நிலைகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் முழு கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளவும் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்களை வீழ்த்துவதற்கும் இரும்புத் தோட்டாக்களைச் சுடும் இலகு ரக இயந்திரத் துப்பாக்கிகளை அண்மையில் நிறுவியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து ட்ரோன்களை வீழ்த்துவதற்காக நக்ஸலைட் எதிர்ப்பு படைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் படையினரும் தங்கள் படை பிரிவுகளுக்கு இந்த ரகத் துப்பாக்கிகளை ஒதுக்கீடு செய்ய தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருப்பதாவது:
வான்வழி ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பக் கருவி கண்டுபிடிக்கும் வரை வானில் குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்களை 
வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்டாக்களைச் சுடும் துப்பாக்கி (பிஏஜி) போன்ற தற்போது புழக்கத்தில் உள்ள ஆயுதங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த ரக துப்பாக்கிகள் எந்தப் படைப்பிரிவினர் வசம் போதிய அளவு இல்லையோ அவர்கள் இவற்றைக் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். 
இந்த ரகத் துப்பாக்கிகள் தரையில் இருந்து 60 மீட்டர் முதல் 100 மீட்டர் உயரத்தில் பறக்கும் ட்ரோன்களை எளிதில் வீழ்த்தும் திறன் வாய்ந்தவையாகும். நாட்டிற்குள் வெடிகுண்டுகளை வீசவும், ஆயுதங்களை வீசவும், எல்லைப் பகுதியில் ஊடுருவி பாதுகாப்பு நடவடிக்கைகளை உளவு பார்க்கவும் அனுப்பப்படும் ட்ரோன்களைத் தடுக்கவும் இது உதவும்.
பாகிஸ்தான், வங்கதேசத்தையொட்டிய 6,300 கி.மீட்டர் எல்லையைப் பாதுகாக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இன்சாஸ் போன்ற இலகு ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்துமாறும், தாக்குதல் நடத்த முற்படும் வகையில் ஆளில்லா விமானங்கள் அடையாளம் காணப்பட்டால் அவற்றை வீழ்த்துவதற்கு 
ரப்பர் தோட்டாக்களைச் சுடும் பிஏஜி ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
கடந்த ஜூனில் ஜம்முவில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட இரு ட்ரோன்கள் குண்டு வீசின. இதில் இரண்டு விமானப் படை வீரர்கள் காயமடைந்தனர். அந்த அலுவலகக் கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. அது முதல் ட்ரோன்களை வீழ்த்தக் கூடிய நவீன ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதில் பாதுகாப்புப் படைகள் கவனம் செலுத்தி வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com