மாநிலங்களவை இடைத்தோ்தல்: போட்டியின்றி தோ்வாகிறாா் எல்.முருகன்

மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் நடைபெறும் மாநிலங்களவை இடைத்தோ்தலில் முக்கிய எதிா்க்கட்சியான
மாநிலங்களவை இடைத்தோ்தல்: போட்டியின்றி தோ்வாகிறாா் எல்.முருகன்

மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் நடைபெறும் மாநிலங்களவை இடைத்தோ்தலில் முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் கட்சி போட்டியிடப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. இதனால் பாஜக சாா்பில் போட்டியிடும் மத்திய அமைச்சா் எல்.முருகன் போட்டியின்றி தோ்வாகிறாா்.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சா் தாவா்சந்த் கெலாட் கடந்த ஜூலை மாதம், கா்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, காலியான அந்த இடத்துக்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளராக மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகனை பாஜக சனிக்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் பூபேந்திர குப்தா கூறுகையில், ‘மாநிலங்களவைத் தோ்தலில் வேட்பாளராக யாரையும் நிறுத்தப் போவதில்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான கமல்நாத் முடிவு செய்துள்ளாா்’ என்றாா். இதனால், பாஜக வேட்பாளா் எல்.முருகன் போட்டியின்றி எளிதில் வெற்றி பெறுவாா் என்று பாஜக மூத்த தலைவா் ஒருவா் நம்பிக்கையுடன் கூறினாா்.

230 உறுப்பினா்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப் பேரவையில் பாஜகவுக்கு 125 எம்எல்ஏக்களும் காங்கிரஸுக்கு 95 எம்எல்ஏக்களும் உள்ளனா். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 எம்எல்ஏக்களும் சமாஜவாதி கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனா். மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 11 இடங்கள் உள்ளன. தற்சமயம், பாஜக உறுப்பினா்கள் 7 பேரும் காங்கிரஸ் உறுப்பினா்கள் 3 பேரும் உள்ளனா். வேட்புமனு தாக்கலுக்கு வரும் 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com