கோவாவில் வேலையில்லாதோருக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை: ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதி

கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாதோருக்கு ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாதோருக்கு ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால், 

கரோனா பரவல் காரணமாக தொழிலாளர்கள் பலரும் வேலையிழந்துள்ளனர். கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாதோருக்கு குறைந்தபட்சம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கப்படும். அதிகபட்சம் ரூ. 5,000 வரை வழங்கப்படும். 

மேலும் கோவா இளைஞர்களுக்கு அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். அதுபோல தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்புகளை பெற உதவி செய்யப்படும். 80% வேலைவாய்ப்பு கோவா இளைஞர்களுக்கு ஒதுக்கித் தரப்படும். 

அதுபோல சுற்றுலா சார்ந்துள்ள தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள நிலையில், அவர்களின் வேலை மறுசீரமைப்பு செய்வதுடன் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com