பல்கலை. மாணவர் சேர்க்கை: வரதட்சணை எதிர்ப்பு ஒப்பந்தம் அவசியம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள கேலிகட் பல்கலைக் கழகம் வித்தியாசமான ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் வழங்கி வருகிறது.
பல்கலை. மாணவர் சேர்க்கை: வரதட்சணை எதிர்ப்பு ஒப்பந்தம் அவசியம்
பல்கலை. மாணவர் சேர்க்கை: வரதட்சணை எதிர்ப்பு ஒப்பந்தம் அவசியம்


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள கேலிகட் பல்கலைக் கழகம் வரதட்சணை எதிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் வழங்கி வருகிறது.

வரதட்சணை வாங்கமாட்டேன், கொடுக்கவும் மாட்டேன் என மாணவர்களிடம் கையெழுத்து மூலம் ஒப்பந்தம் பெற்றுக்கொண்டு விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.

மேலும், கேலிகட் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரி முதல்வர்களுக்கும் பல்கலைக் கழக நிர்வாகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வரதட்சணைக்கு எதிராக கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும் என்று கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உத்தரவு பிறப்பித்ததிலிருந்து இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கேரளத்தில் வரதட்சணைக் கொடுமையால், திருமணமான பல இளம் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com