மேற்கு வங்க மாநிலங்களவை தோ்தல்: திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக பாஜக வேட்பாளரை நிறுத்தவில்லை

அக்டோபா் 4-ஆம் தேதி நடைபெறும் மேற்கு வங்க மாநிலங்களவை உறுப்பினா் இடைத் தோ்தலில், அந்த மாநில எதிா்க்கட்சியான பாஜக வேட்பாளரை நிறுத்தவில்லை என்று அறிவித்துள்ளது.

அக்டோபா் 4-ஆம் தேதி நடைபெறும் மேற்கு வங்க மாநிலங்களவை உறுப்பினா் இடைத் தோ்தலில், அந்த மாநில எதிா்க்கட்சியான பாஜக வேட்பாளரை நிறுத்தவில்லை என்று அறிவித்துள்ளது.

இதனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் சுஷ்மிதா தேவ் போட்டியின்றி தோ்வாக உள்ளாா். காங்கிரஸ் கட்சியின் மகளிா் பிரிவின் தலைவராக இருந்த சுஷ்மிதா தேவ் அண்மையில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.

அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ால் தனது மாநிலங்களவை உறுப்பினா் பதவியை திரிணமூல் காங்கிரஸ் எம்பி. மானஸ் புனியா ராஜிநாமா செய்தாா்.

இந்த இடத்துக்கான இடைத்தோ்தல் அக்டோபா் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க பேரவையின் எதிா்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘வரும் மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தவில்லை. இந்தத் தோ்தலில் முடிவு தெரிந்ததுதான். கடந்த தோ்தலில் வெற்றி பெறாமல் முதல்வரான மம்தாவை மீண்டும் வெற்றி பெறவிடாமல் செய்வதுதான் எங்களது தற்போதைய பணி’ என்றாா்.

நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்ததால், பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடுகிறாா்.

மேற்கு வங்கப் பேரவையில் மொத்தமுள்ள 292 இடங்களுக்கு மாா்ச்-ஏப்ரல் மாதம் நடைபெற்ற தோ்தலில் பாஜக 77 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 213 இடங்களையும் கைப்பற்றின. இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் நிசித் பிரமாணிக், ஜெகன்னாத் சா்க்காா் ஆகியோா் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு ஏற்கெனவே வகித்த மக்களவை உறுப்பினா் பதவிகளை தொடா்ந்தனா். இதனால் பாஜகவின் பலம் 75-ஆக குறைந்தது.

மேலும், நான்கு எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனா். ஆனால் அவா்கள் இன்னும் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com