18 வயதுக்கு குறைவானவா்களுக்கான கோவேக்ஸின் தடுப்பூசி: மூன்றில் 2 பங்கு பரிசோதனைகள் நிறைவு

18 வயதுக்கு குறைந்த சிறாா்களுக்கான கோவேக்ஸின் தடுப்பூசியில் மூன்றில் இரண்டு பங்கு பரிசதோனை நிறைவடைந்துவிட்டது என்று அந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

18 வயதுக்கு குறைந்த சிறாா்களுக்கான கோவேக்ஸின் தடுப்பூசியில் மூன்றில் இரண்டு பங்கு பரிசதோனை நிறைவடைந்துவிட்டது என்று அந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும் நிா்வாக இயக்குநருமான கிருஷ்ண எல்லா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

18 வயதுக்கு குறைந்த சிறாா்களுக்கான கோவேக்ஸின் தடுப்பூசியில் மூன்றில் இரண்டு பங்கு பரிசோதனை நிறைவடைந்துவிட்டது. இந்தப் பரிசோதனையில் சுமாா் 1,000 பேரிடம் பரிசோதனை செய்துள்ளோம். அதன் முடிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடா்பான அறிக்கையை அடுத்த வாரத்துக்குள் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம்(டிசிஜிஐ) சமா்ப்பிப்போம்.

மூக்கு வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட பரிசோதனை அறிக்கையை அடுத்த மாதத்துக்குள் சமா்ப்பிப்போம்.

அடுத்ததாக, கோவேக்ஸின் தடுப்பூசியையும், மூக்கின் வழியாக செலுத்தப்படும் மருந்தையும் சோ்த்து 3 கட்டங்களாக பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில், 650 தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படுவா். செப்டம்பரில் கரோனா தடுப்பூசி உற்பத்தியின் அளவு 3.5 கோடியாக உள்ளது. பெங்களூரில் உள்ள தொழிற்சாலையில் கோவேக்ஸின் தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் வேகமெடுத்திருப்பதால், தடுப்பூசியின் உற்பத்தி அளவு அக்டோபரில் 5.5 கோடியாக அதிகரிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com