தில்லியில் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு: சுகாதாரத்துறை அமைச்சர்

தில்லியில் 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்  (கோப்புப்படம்)
சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)

தில்லியில் 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில், சில மாநிலங்களில் பெய்து வரும் மழையால் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தில்லியில் டெங்கு காய்ச்சல் நிலவரம் குறித்து சத்யேந்திர ஜெயின் கூறியது:

இந்தாண்டு செப்டம்பர் 1 முதல் 19 வரை 87 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் குறைவு. 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 188 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது.

மேலும், தேசிய தலைநகரான தில்லியில் கரோனா தொற்றின் பரவல் கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com