"எல்லையில் போர்ச் சூழல்'

இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் போர்ச்சூழலை சந்தித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
"எல்லையில் போர்ச் சூழல்'

இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் போர்ச்சூழலை சந்தித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
 லடாக், உத்தரகண்ட், அருணாசல பிரதேசம் ஆகிய நமது எல்லையையொட்டிய பகுதிகளில் சீனா 10 புதிய ராணுவத் தளங்களை அமைத்து வருவதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இது தவிர இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருவதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 இந்தச் செய்தியை தனது சுட்டுரைப் பக்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் "நமது எல்லைப் பகுதிகளில் போர்ச்சூழலை நாம் சந்தித்து வருகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 இந்திய-சீன ராணுவத்தினர் இடையே பாங்காங் ஏரிப் பகுதியில் கடந்த ஆண்டு மே 5-ஆம் தேதி மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை மத்திய அரசு கையாளும் விதத்தை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இரு தரப்பும் அப்பகுதியில் படைக்குவிப்பை படிப்படியாக அதிகரித்தன. எனினும், ராணுவம் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு கோக்ரா பகுதியில் இருந்து இரு தரப்பும் கடந்த மாதம் படைகளை வாபஸ் பெற்றன. தற்போது பிரச்னைக்குரிய பகுதியில் இரு நாடுகளும் 50,000 முதல் 60,000 வீரர்கள் வரை குவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com