வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து: கோழிக்கோடு பல்கலைக்கழகம் அதிரடி

திருமணத்திற்கு வரதட்சணை வழங்கினாலோ அல்லது வாங்கினாலோ சேர்க்கை, பட்டம் ரத்து செய்யப்படும் என்ற  முன்னறிவிப்பை மாணவ, மாணவிகளுக்கு ஒரு முன்நிபந்தனை
வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து: கோழிக்கோடு பல்கலைக்கழகம் அதிரடி

திருமணத்திற்கு வரதட்சணை வழங்கினாலோ அல்லது வாங்கினாலோ சேர்க்கை, பட்டம் ரத்து செய்யப்படும் என்ற  முன்னறிவிப்பை மாணவ, மாணவிகளுக்கு ஒரு முன்நிபந்தனையை சேர்க்கைக்கு கட்டாயமாக்கியுள்ளது கோழிக்கோடு பல்கலைக்கழகம்.

கேரளம் மாநிலத்தில் சமீப காலமாக வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மக்களின் கோபத்தைத் தூண்டியது. இதையடுத்து வரதட்சணை கொடுமையை தடுக்கும் நோக்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து வருகிறது. 

இந்நிலையில், மாநிலத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான கோழிக்கோடு பல்கலைக்கழகம், வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தில் படிப்பிற்கான சேர்க்கை படிவம் மற்றும் பட்டம் வழங்கும் படிவத்தில்,  திருமணத்திற்கு வரதட்சணை வழங்கவோ அல்லது வாங்கவோ ​​மாட்டோம் என்ற அறிவிப்பில் கையெழுத்திடுவது என்பது சேர்க்கை, பட்டம் பெறும்  மாணவ, மாணவிகளுக்கு ஒரு முன்நிபந்தனையாக வைத்து வரதட்சணை எதிர்ப்புக்கான படிவத்தை சேர்க்கைக்கு கட்டாயமாக்கியுள்ளது.

வரதட்சணை எதிர்ப்பு பத்திரம்: மேலும் மாணவரின் உறுதிமொழி படிவத்தில், "வரதட்சணை வாங்குவது அல்லது வழங்குவது தொடர்பான விதிகளை அல்லது சட்டத்தை மீறினால், பல்கலைக்கழகத்தில் எனது சேர்க்கையை ரத்து செய்வது உள்பட பொருத்தமான நடவடிக்கைக்கு நான் பொறுப்பேற்க வேண்டும். படிப்பு காலத்தில் பெற்ற மானியத்தை திருப்பி வழங்குதல், சேர்க்கை மற்றும் பட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது."

வரதட்சனை வாங்கே மாட்டேன் என உறுதிமொழி படிவத்தில் மாணவர்கள் கையெழுத்திட்ட பின்னரே மாணவர்களுக்கு சேர்க்கை மற்றும் பட்டம் வழங்கப்படும்.

பிற்காலத்தில் வரதட்சணை வழங்குவது அல்லது வாங்குவாரெனில் அந்த மாணவ, மாணவியரின் பட்டம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவு மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி கிடைத்ததும் விரைவில் அமலுக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com