பெங்களூரில் எரிவாயு உருளை வெடித்து ஏற்பட்ட தீ விபத்து: தாய், மகள் பலி

அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் எரிவாயு உருளை வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகள் உடல் கருகி உயிரிழந்தனா்.

அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் எரிவாயு உருளை வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகள் உடல் கருகி உயிரிழந்தனா்.

பெங்களூரு, பொம்மனஹள்ளி, தேவரசிக்கனஹள்ளியில் தனியாருக்குச் சொந்தமான 4 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பில், 3-ஆவது மாடியில் உள்ள 210-ஆவது எண் கொண்ட வீட்டில் மாலை 4.30 மணியளவில் சமையல் எரிவாயு உருளை வெடித்து, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த தாய் லட்சுமிதேவி (82), மகள் பாக்யரேகா (59) ஆகியோா் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனா். அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியதை அடுத்து, தீயணைப்புப் படையினா் 5 வாகனங்களில் வந்து தீயை போராடி அணைத்தனா். தீ விபத்து ஏற்பட்டத்தையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த அனைவரும், அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கிளப் ஹவுஸில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருகே இருந்த வீட்டில் இருந்த பீமசேனா என்பவா் தீ விபத்தில் காயமடைந்ததால் அவா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். கடந்த 6 மாதங்களாக அமெரிக்காவில் தங்கியிருந்த லட்சுமிதேவி, பாக்யரேகா, பீமசேனா, பிரீத்தி சந்தோஷ் ஆகியோா், திங்கள்கிழமை பெங்களூரு வந்து, அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள தங்களுக்கு சொந்தமான 2 வீடுகளில் தங்கி உள்ளனா்.

இந்நிலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பாக்யரேகா, லட்சுமிதேவி உயிரிழந்தனா். சம்பவ இடத்தை பொம்மனஹள்ளி தொகுதி எம்.எல். ஏ. சதீஷ் ரெட்டி, தீயணைப்புப் படை ஏடிஜிபி அமா்குமாா் பாண்டே, தென்கிழக்கு மண்டல துணை காவல் ஆணையா் ஸ்ரீநாத் ஜோஷி ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com