ஜம்மு-காஷ்மீரில் கால் பதிக்கும் ரிலையன்ஸ்: வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டம்

ஜம்மு - காஷ்மீரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிப்ப்புத் தெரிவித்து வர்த்தகர்கள் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டம்
வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டம்

ஜம்மு - காஷ்மீரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிப்ப்புத் தெரிவித்து வர்த்தகர்கள் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீரில் அமலில் இருந்த இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.

இதன்மூலம், ஜம்மு - காஷ்மீரில் பிற மாநிலத்தவரும் குடியேறுவதற்கான வழிவகை உருவானது. இந்த சட்டத்தை நீக்கியதற்கு 2 ஆண்டுகளாக பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறைக் கடைகள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வர்த்தகர்களும் இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com