மன்சுக் மாண்டவியாவுக்கு நன்றி தெரிவித்த உலக சுகாதார அமைப்பு

அடுத்த மாதம் முதல் மிகுதியாக இருக்கும் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு உலக சுகாதார அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா இரண்டாம் அலையின்போது, தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இந்நிலையில், அடுத்த மாதம் முதல் மிகுதியாக இருக்கும் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கோவாக்ஸ் திட்டத்தை அக்டோபர் மாதம் முதல் இந்தியா மீண்டும் தொடங்கும் என அறிவித்ததற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு நன்றி.

இந்தாண்டின் இறுதிக்குள் அனைத்து நாடுகளிலும் 40 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு இது முக்கியமான அறிவிப்பு" என பதவிட்டுள்ளார். உலகின் மருந்தகம் என்ற பெயரை பெற்ற இந்தியாதான் உலகிலேயே அதிகமான தடுப்பூசிகளை தயாரிக்கிறது. 

ஆனால், ஏப்ரல் மாதம் கரோனா இரண்டாம் அலையின்போது, நாடு பெரும் பாதிப்புக்குள்ளானதையடுத்து சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் பல்வேறு நாடுகள் கரோனா தடுப்பூசிகளை வாங்கி மக்களிடையே விநியோகம் செய்வதற்கு உலக சுகாதார அமைப்பு, கவி தடுப்பூசி கூட்டணி அமைப்பு உதவி செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com