புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: பாஜக வேட்பாளர் மனு ஏற்பு

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில், ஆளும் தே.ஜ கூட்டணியில் பாஜக மாநில பொருளாளா் எஸ்.செல்வகணபதி புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பாஜக வேட்பாளர் எஸ்.செல்வகணபதி
பாஜக வேட்பாளர் எஸ்.செல்வகணபதி


புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில், ஆளும் தே.ஜ கூட்டணியில் பாஜக மாநில பொருளாளா் எஸ்.செல்வகணபதி புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு பரிசீலனையின் போது, அவரது மனு ஏற்கப்பட்டு, சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், பாஜக வேட்பாளர் எஸ். செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளாா்.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அக்டோபர் 4 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு செப்.15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் சுயேச்சைகள் 5 பேரும், தேசிய ஜஜநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளர் ஒருவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கான வேட்புமனு பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் மனு ஏற்கப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமி கூறியதாவது:

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக 8 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. சுயேட்சையாக தாக்கல் செய்யப்பட்ட 5 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அவர்களது மனுக்கள் முன்மொழியப்படாததால் நிராகரிக்கப்பட்டது.

என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெற இறுதி நாள் என்பதால், அன்றைய தினம் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றார்.

புதுச்சேரி மாநிலத்தில், முதன் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவைச் சோ்ந்தவா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com