நரேந்திர கிரி மர்ம மரணம்: விசாரணையை கையில் எடுத்த சிபிஐ

அகில பாரதிய அகாரா பரிஷத்தின் தலைவர் நரேந்திர கிரியின் மரணத்தை சுற்றி பல மர்மங்கள் நீடித்துவரும் நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரிக்கவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப்பிரதேசத்தில் முக்கிய மத தலைவர்களில் ஒருவரான நரேந்திர கிரி, கடந்த திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ கையில் எடுத்த நிலையில், ஆறு பேர் கொண்டு குழு பிரயாக்ராஜ் நகருக்கு விரைந்துள்ளது.

தலைநகர் லக்னோவிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள நரேந்திர கிரியின் ஆசிரமத்தில் இறந்த நிலையில் அவரின் உடல் திங்கள்கிழமை மதியம் கண்டெடுக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் முன்னணி இந்து அமைப்புகளில் ஒன்றாக அகில பாரதிய அகாரா பரிஷத் திகழ்கிறது. அதன் தலைவர் நரேந்திர கிரியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிபிஐக்கு பரிந்துரை செய்திருந்தார்.

நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் நரேந்திர கிரி புகைப்படம் எடுத்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 13 பக்கத்திற்கு அவர் கடிகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆசிரமத்தில் இரண்டாவது முக்கிய நபராக உள்ள ஆனந்த கிரி, ஆதிய திவாரி, அவரது மகன் சந்தீப் திவாரி ஆகியோர்தான் தன் தற்கொலைக்கு காரணம் என நரேந்திர கிரி குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணுடன் இருப்பது போன்ற மார்பிப் செய்யப்பட்ட புகைப்படத்தின் காரணமாக, தான் அழுத்தத்திற்கு உள்ளானதாக நரேந்திர கிரி கடிதத்தில் கூறியுள்ளார். இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, இதே குற்றச்சாட்டுகளை 4 நிமிடங்கள் 30 வினாடிகள் கொண்ட விடியோவாக நரேந்திரா பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்கொலை கடிதத்திலும் விடியோவில் ஒரே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

நரேந்திர கிரி குற்றம்சாட்டிய மூவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஆனந்த கிரி விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்வது, படகுகளில் இன்ப சுற்றுலா செல்வது, பிரான்ஸில் உள்ள பந்தைய பாதையில் லம்போர்கினி கார் முன்பு நிற்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளஙங்களில் தற்போது வெளியாகியுள்ளது. நரேந்திர கிரியின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இப்புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com