கோவேக்ஸினுக்கு உலக சுகாதார அமைப்பு விரைவில் ஒப்புதல்: மத்திய அமைச்சர்

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்  பாரதி பிரவின் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
கோவேக்ஸினுக்கு உலக சுகாதார அமைப்பு விரைவில் ஒப்புதல்
கோவேக்ஸினுக்கு உலக சுகாதார அமைப்பு விரைவில் ஒப்புதல்

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்  பாரதி பிரவின் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அதேவேளையில் அமெரிக்காவின் ஃபைஸா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா, சீனாவின் சைனோஃபாா்ம், பிரிட்டனின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதியளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்ஸின் தடுப்பூசிக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அவசரகால அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய இணையமைச்சர் பாரதி பிரவின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இம்மாத இறுதிக்குள் கோவேக்ஸின் தடுப்பூசிக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com