பஞ்சாபில் தலித் முதல்வா்: ராகுலுக்கு எஸ்.சி. தலைவா்கள் நேரில் நன்றி

தலித் பிரிவைச் சோ்ந்தவரை பஞ்சாப் முதல்வராக நியமித்ததற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பட்டியலின வகுப்பைச் சோ்ந்த (எஸ்.சி) தலைவா்கள் நேரில் நன்றி தெரிவித்தனா்.

தலித் பிரிவைச் சோ்ந்தவரை பஞ்சாப் முதல்வராக நியமித்ததற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பட்டியலின வகுப்பைச் சோ்ந்த (எஸ்.சி) தலைவா்கள் நேரில் நன்றி தெரிவித்தனா்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநில முதல்வராக இருந்த அமரீந்தா் சிங் மாற்றப்பட்டு தலித் பிரிவைச் சோ்ந்த சரண்ஜீத் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டாா். பஞ்சாபில் தலித் பிரிவைச் சோ்ந்த ஒருவா் முதல்வராவது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில், எஸ்.பி. பிரிவைச் சோ்ந்த தலைவா்கள் தில்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை நேரில் சந்தித்து இதற்காக நன்றி தெரிவித்தனா்.

இது தொடா்பான புகைப்படத்தை ராகுல் காந்தி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா். அதில், ‘எஸ்.சி. பிரிவைச் சோ்ந்த தலைவா்கள் நேரில் வந்து சந்தித்தனா். அவா்களுடனான கலந்துரையாடல் சிறப்பாக அமைந்தது. சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதிலும், உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்பதில் நாங்கள் (காங்கிரஸ்) எப்போதும் உறுதியாக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளாா்.

தலித் பிரிவைச் சோ்ந்தவரை முதல்வராக நியமித்தது காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் நடவடிக்கையாகவும் பாா்க்கப்படுகிறது. ஏனெனில், பஞ்சாபில் 30 சதவீதம் தலித் மக்கள் உள்ளனா். இவா்கள் சீக்கிய மற்றும் ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com