மாநிலங்களின் கையிருப்பில் 4.15 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 4.15 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 4.15 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது.

இதுபற்றி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 82.57 கோடிக்கும் (82,57,88,115) மேலான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 94 லட்சத்துக்கும் (94,37,525) மேலான தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படுவதற்குத் தயாராக உள்ளன. மாநிலங்களின் கையிருப்பில் 4.15 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளன."

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 85 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு தரவுகளின் படி இன்று (சனிக்கிழமை) மட்டும் மாலை 5.45 மணி நிலவரப்படி மொத்தம் 62,98,470 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com