ஓபிசி பட்டியலில் திருநங்கைகள்: மத்திய அமைச்சரவையிடம் வரைவு அறிக்கை

இட ஒதுக்கீட்டில், திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்தியசமூக நீதித் துறை  மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது.
ஓபிசி பட்டியலில் திருநங்கைகள்: மத்திய அமைச்சரவையிடம் வரைவு அறிக்கை
ஓபிசி பட்டியலில் திருநங்கைகள்: மத்திய அமைச்சரவையிடம் வரைவு அறிக்கை


புது தில்லி: இட ஒதுக்கீட்டில், திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்தியசமூக நீதித் துறை  மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது.

திருநங்கைகளை ஓபிசி பிரிவினருக்கான பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை, சமூக நீதித் துறை, மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதன்பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வக்கப்படும். இட ஒதுக்கீடு பெற ஏதுவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திருநங்கைகளை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது.

மூன்றாம் பாலினத்தவரை சம நிலையில், சம அந்தஸ்தில் வைத்து மதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டின் கீழ் திருநங்கைகள் பயன்பெறும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓபிசி பட்டியலில் திருநங்கைகள் இடம்பெற்றால், அரசுப் பணிகளில் அவர்களுக்கான பணியிடங்கள் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com