உபியில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு காரணமாக பலியானர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு காரணமாக பலியானர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு காரணமாக பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

முக்கியமாக பிரோசாபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 42 சிறார்கள் உட்பட 63 பேர் உயிரிழந்திருந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.

12 வயது சிறுமி டெங்கு பாதிப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை பலியானதாக தெரிவித்த பிரோசாபாத் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சங்கீதா கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 154 நோயாளிகள் டெங்கு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 153 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com