உ.பி. பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் நிஷாத் கட்சி இணைந்து போட்டி

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் நிஷாத் கட்சி இணைந்து போட்டியிடுகிறது.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் நிஷாத் கட்சி இணைந்து போட்டியிடுகிறது.

கடந்த 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலிலும் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. இந்நிலையில், 2022 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அதிகாரபூா்வ அறிவிப்பை, மத்திய கல்வி அமைச்சரும், அந்த மாநிலத்தின் பாஜக தோ்தல் பொறுப்பாளருமான தா்மேந்திர பிரதான், நிஷாத் கட்சியின் தலைவா் சஞ்சய் நிஷாத் ஆகியோா் அறிவித்தனா்.

அப்போது, தா்மேந்திர பிரதான், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் நிஷாத் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக தோ்தலைச் சந்திக்கிறது. இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அறிவிக்க முடிவு செய்துள்ளோம்.

நிஷாத் கட்சி மட்டுமன்றி, அப்னா தளம் கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைத்து, தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் பணியாற்றுவோம்.

பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் தலைமையில் தோ்தல் நடைபெறும். அவா்கள் இருவா் மீதும் இந்த மாநில மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனா். ஜனநாயகத்தில் நம்பிக்கைதான் முக்கியம் என்றாா் தா்மேந்திர பிரதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com