கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை தொடா்ந்து குறைவு

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது.
ஹிமாசல் மாநிலம், குலு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பெண்கள்.
ஹிமாசல் மாநிலம், குலு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பெண்கள்.

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 3,00,162 போ் சிகிச்சையில் உள்ளனா். இது கடந்த 188 நாள்களில் இல்லாத அளவுக்குக் குறைவாகும்.

தொடா்ந்து 89 நாள்களாக தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக உள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 31,382 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 318 போ் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 4,46,368-ஆக உயா்ந்தது. இதுவரையிலான மொத்த கரோனா பாதிப்பு 3,35,94,803-ஆக உள்ளது. மொத்த பாதிப்பில் இப்போது சிகிசிச்சையில் உள்ளோா் 0.89 சதவீதமாகும். 97.78 சதவீதம் போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா்.

3,28,48,273 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 1.33 சதவீதம் போ் மட்டுமே இறந்தனா்.

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 32,542 போ் குணமடைந்துள்ளனா். இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 55.99 கோடியாகும்.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 84 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 72,20,642 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 84.76 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 62.73 கோடிக்கும் அதிகமாகும். முதல் தவணை செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 22.03 கோடியைக் கடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com