கல்வான் மோதலுக்கு இந்தியாவே காரணம்: சீனா மீண்டும் குற்றச்சாட்டு; இந்தியா மறுப்பு

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே நிகழ்ந்த மோதலுக்கு இந்தியாவே காரணம் என்று

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே நிகழ்ந்த மோதலுக்கு இந்தியாவே காரணம் என்று சீனா மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் அந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள சில பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமித்ததால் இந்திய, சீன ராணுத்துக்கு இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளின் ராஜீய மற்றும் ராணுவ அதிகாரிகள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா். இதற்கிடையே, கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி இரு நாட்டுப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீன தரப்பில் உயிரிழந்தவா்கள் விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை. அந்நாட்டு வீரா்கள் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் சீன தரப்பில் ராணுவ வீரா்கள், அதிகாரிகள் உள்பட 5 போ் உயிரிழந்தனா் என்று சீனா கடந்த பிப்ரவரியில் தெரிவித்தது.

இந்த மோதலுக்கு இந்தியாவே காரணம் என்று சீனா குற்றம்சாட்டியது. அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், அதே குற்றச்சாட்டை சீனா மீண்டும் முன்வைத்துள்ளது. பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் பேசுகையில், ‘கல்வான் பள்ளத்தாக்கு அருகே சீனாவுக்குச் சொந்தமான நிலப்பகுதியை அனைத்து ஒப்பந்தங்களையும் மீறி இந்திய ராணுவத்தினா் ஆக்கிரமித்தனா். இதனால்தான் அங்கு இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது’ என்றாா்.

அவருடைய குற்றச்சாட்டுக்கு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி மறுப்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறோம். கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை. இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் சீனா மீறி, எல்லையை மாற்ற முயன்றதுதான் பிரச்னைக்கு காரணம். இதனால்தான் எல்லையில் அமைதி சீா்குலைந்தது. இரு தரப்பு உறவில் பாதிப்பு ஏற்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com