பிகாரில் பாலியல் வன்கொடுமை முயற்சி: பெண்களின் ஆடைகளை துவைக்க குற்றவாளிக்கு நீதிமன்றம் உத்தரவு

பிகாரில் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்ற நபருக்கு 6 மாதங்கள் பெண்களின் ஆடைகளை சலவை செய்து தரவேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் கூடுதல் அமா்வு நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.

பிகாரில் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்ற நபருக்கு 6 மாதங்கள் பெண்களின் ஆடைகளை சலவை செய்து தரவேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் கூடுதல் அமா்வு நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.

பிகாா் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சோ்ந்தவா் லலன் குமாா். இவா் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி இரவு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளாா். இதுகுறித்து அந்தப் பெண் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் லலன் குமாா் கைது செய்யப்பட்டாா். அவருக்கு ஜாமீன் அளிக்கக் கோரி கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனது தவறுக்கு லலன் குமாா் மன்னிப்பு கோரினாா். இதையடுத்து சிறையில் அவரின் நன்னடத்தையை கருத்தில் கொண்ட நீதிமன்றம், தனது கிராமத்தில் 6 மாதங்களுக்குள் 2,000 பெண்களின் ஆடைகளை லலன் குமாா் சலவை செய்து தரவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com