பரபரப்பை ஏற்படுத்திய தில்லி நீதிமன்ற துப்பாக்கிச்சூடு; இருவர் கைது

உமாங், வினய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி நீதிமன்ற துப்பாக்கிச்சூடு
தில்லி நீதிமன்ற துப்பாக்கிச்சூடு

பிரபல ரௌடி ஜிதேந்தா் மான் மற்றும் ஆயுதம் ஏந்திய எதிர் கோஷ்டியைச் சோ்ந்த இருவா் தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக தில்லி காவல்துறை சிறப்பு பிரிவு இருவரை கைது செய்துள்ளது. 

உமாங், வினய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வடமேற்கு தில்லி ஹைதர்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. துப்பாக்குச் சூடு நடைபெற்ற ரோஹிணி நீதிமன்றத்தின் நான்காவது வாயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஒரு சாரர் கூறுகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று, வழக்கறிஞர் போல் உடை அணிந்து வந்த உமாங் உள்பட மூவர், நீதிமன்றததின் 9ஆவது செக்டரில் உள்ள அறைக்கு சென்றதாகவும் இவை அனைத்தும் திட்டமிட்டப்படி நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்குச்சூட்டு பிறகு, வெளியில் நின்று கொண்டிருந்த காரில் தப்பித்து செல்ல அவர்கள் திட்டமிட்டுருந்தனர். ஆனால், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இரவர் கொல்லப்பட்ட உமாங் மட்டும் தப்பித்து சென்றுள்ளார். 

நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பிரபல ரெளடி ஜிதேந்தா் மானை, வழக்கறிஞர் போல் மாறுவேடம் போட்டுவந்த விஷமிகள் மூன்று முறை சுட்டனர். ஜிதேந்தரின் பாதுகாப்புக்காக அங்கிருந்த சிறப்பு படை வீரர்கள் திரும்பி சுட்டதில், சம்பவ இடத்திலேயே தாக்குதலில் ஈடுபட்ட இருவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 

இதுகுறித்து வெளியான விடியோவில், நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூடு நடைபெறுவது போன்ற சத்தமும் வளாகத்திலிருந்து காவல்துறையினர், வழக்கறிஞர்கள் பதறி ஓடிவருவதும் பதிவாகியுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com