ம.பி. மாநிலங்களவை உறுப்பினர்: போட்டியின்றி தேர்வானார் எல்.முருகன்

மத்திய பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தேர்வானதாக தேர்தல் அதிகாரி திங்கள்கிழமை அறிவித்தார்.
பாஜக வேட்பாளா் எல்.முருகன்.
பாஜக வேட்பாளா் எல்.முருகன்.

மத்திய பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தேர்வானதாக தேர்தல் அதிகாரி திங்கள்கிழமை அறிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சா் தாவா்சந்த் கெலாட் கடந்த ஜூலை மாதம், கா்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, காலியான அந்த இடத்துக்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளராக மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகனை பாஜக அறிவித்தது.

இந்நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானதாக தேர்தல் அதிகாரி இன்று அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com