'தடை செய்யப்பட்ட பட்டாசுகளைத் தயாரிப்பது ஏன்?: விதிமீறல் நடக்கிறதா?'

தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை தயாரிப்பது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
'தடை செய்யப்பட்ட பட்டாசுகளைத் தயாரிப்பது ஏன்?'
'தடை செய்யப்பட்ட பட்டாசுகளைத் தயாரிப்பது ஏன்?'

தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை தயாரிப்பது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

உச்சநீதிமன்ற தடையை மீறி தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் வெடிக்கப்படுகின்றனவா என்பதை விளக்கவும் நீமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று (செப். 28) விசாரித்த நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.

தடை செய்யப்பட்ட பெரிய பெரிய சரவெடிகள் வெடிக்கப்படுவதை பார்க்கிறோம் என நீதிமன்றம் தெரிவித்த நிலையில்,

சரவெடி தயாரிப்பதில்லை, சின்ன சின்ன பட்டாசுகளை வாங்கி இணைத்து விடுகிறார்கள் என்று உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், அரசியல் கட்சி, திருமணங்கள், திருவிழாக்களில் வெடிக்கப்படும் பட்டாசுகள் அரசு தடையை மீறி தயாரிக்கப்பட்டவையா என்பதை ஆராய்ந்து விளக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. 

மனுதாரர்கள் தாக்கல் செய்த விவரங்களைப் பார்த்தால் விதிமீறல்கள் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com