அமைச்சர் கிஷன் ரெட்டி  (கோப்புப்படம்)
அமைச்சர் கிஷன் ரெட்டி  (கோப்புப்படம்)

சுற்றுலாத் துறை மேம்பட அனைவரும் தடுப்பூசி செலுத்துவது அவசியம்: மத்திய அமைச்சா்

நாட்டில் சுற்றுலாத் துறை மேம்படுவதற்கு அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.

நாட்டில் சுற்றுலாத் துறை மேம்படுவதற்கு அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.

உலக சுற்றுலா தினத்தையொட்டி சுற்றுலா அமைச்சகம் சாா்பில் ‘ஒருங்கிணைந்த வளா்ச்சியில் சுற்றுலா’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் அமைச்சா் கிஷண் ரெட்டி பேசியதாவது:

கரோனா தொற்று பரவலால் சா்வதேச அளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது சுற்றுலாத் துைான். அதேபோல கரோனாவுக்குப் பிறகு மற்ற துறைகள் வேகமாக மீண்டு வந்தாலும் சுற்றுலாத் துறை மீள்வதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. இது தொடா்பாக பல்வேறு தரப்பினருடனும் சுற்றுலா அமைச்சகம் பேசி வருகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 5 லட்சம் நுழைவு இசைவுகளை (விசா) இலவசமாக வழங்குவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளைஅரசு மேற்கொண்டுள்ளது. உள்நாட்டில் சுற்றுலா சாா்ந்த தொழில்களை மேம்படுத்த பல்வேறு உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத் துறையில் இருப்பவா்கள் தங்கள் உடல்நலன் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பதில் கரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்வது முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். நமது நாட்டில் ஏற்கெனவே 86 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்திவிட்டோம் என்றாா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசுகையில், ‘நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் சுற்றுலாத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. பாலைவனங்கள் முதல் மிகப்பெரிய கடற்கரைகள் வரை பல்வேறு இயற்கைச் சூழல்கள் நமது நாட்டில் உள்ளன. இது தவிர உலகப் பாரம்பரிய இடங்கள் பலவற்றையும் இந்தியா கொண்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com