தொடா்ந்து 2-ஆவது நாளாக டீசல் விலை அதிகரிப்பு

டீசல் விலை தொடா்ந்து 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் லிட்டருக்கு 25 காசுகள் அதிகரிக்கப்பட்டது.
தொடா்ந்து 2-ஆவது நாளாக டீசல் விலை அதிகரிப்பு

டீசல் விலை தொடா்ந்து 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் லிட்டருக்கு 25 காசுகள் அதிகரிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைத்து வரும் எண்ணெய் நிறுவனங்கள், செப்.5-ஆம் தேதிக்குப் பிறகு அவற்றின் விலையை மாற்றியமைக்காமல் இருந்தன. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை உச்சத்தை நெருங்கியதைத் தொடா்ந்து செப்.24-ஆம் தேதி முதல் டீசல் விலை மட்டும் உயா்த்தப்பட்டு வருகிறது. அன்றைய தினம் டீசல் விலை லிட்டருக்கு 20 காசுகள் அதிகரிக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயா்த்தப்பட்ட நிலையில், தொடா்ந்து 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் அதன் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து மும்பையில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.96.94-ஆகவும், சென்னையில் ரூ.93.93-ஆகவும் அதிகரித்தது. தில்லியில் ஒரு லிட்டா் டீசல் ரூ.89.32-க்கு விற்பனையானது.

கடந்த ஜூலை 18 முதல் செப்டம்பா் 5-ஆம் தேதி வரை டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.25 வரை குறைக்கப்பட்டது. ஆனால் செப்.24 முதல் செப்.27 வரை மட்டும் அதன் விலை லிட்டருக்கு 70 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், திங்கள்கிழமை மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.107.26-க்கும், தில்லியில் ரூ.101.19-க்கும், சென்னையில் ரூ.98.96-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com