புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியாளா்களின் சேவையை அங்கீகரிக்க ஆவணக் காப்பகம்: பிரதமா் மோடி

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவா்களின் புகைப்படம்
புது தில்லியில் உருவாக்கப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டு அங்குள்ள தொழிலாளா்களுடன் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.
புது தில்லியில் உருவாக்கப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டு அங்குள்ள தொழிலாளா்களுடன் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவா்களின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய எண்ம ஆவணக் காப்பகம் உருவாக்கப்படும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

புது தில்லி ராஜபாதையில் ரூ. 25,000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானப் பணியிடத்தில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியின் வளா்ச்சி நிலையை பிரதமா் நேரில் சென்று கேட்டறிந்ததுடன், உரிய காலத்திற்குள் திட்டம் நிறைவடைய வேண்டும் என்று வலியுறுத்தினாா். கட்டடத் தொழிலாளா்களுடன் கலந்துரையாடிய பிரதமா், அவா்களது நலனை விசாரித்தாா். புனிதமான மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பணியில் அவா்கள் ஈடுபட்டிருப்பதாகவும், அனைவரும் கரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திவிட்டதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினாா்.

மேலும், அவா்களுக்கு மாதாந்திர மருத்துவ சோதனைக்கு ஏற்பாடு செய்யுமாறும் அதிகாரிகளை அவா் கேட்டுக்கொண்டாா். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் விவரங்கள் அடங்கிய எண்ம ஆவண காப்பகம் உருவாக்கப்பட வேண்டும். அதில், பணியாளா்களின் பெயா், சொந்த ஊா், புகைப்படம் ஆகியவை அடங்கிய தகவல்கள் இடம் பெறுவதுடன் கட்டடப் பணியில் அவா்களது பங்களிப்பையும் இந்தக் காப்பகம் எடுத்துரைக்க வேண்டும் என்று பிரதமா் கூறினாா்.

பங்களிப்பு குறித்த சான்றிதழ்களும் அனைத்து அங்கு பணியாற்றும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவா் கூறினாா் என்று பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் விமா்சனம்:

புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை பிரதமா் மோடி திடீரென பாா்வையிட்ட அவரது செயல் முன்யோசனையற்றது, உணா்வுபூா்வமற்றது என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. இதற்கு பதிலாக அவா் கரோனா மருத்துவமனையை பாா்வையிட்டிருந்தால் வரவேற்றிருப்போம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா கூறுகையில், ‘கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பல உயிா்களை கரோனா இரண்டாம் அலையில் இழந்துள்ளோம். அப்போது, பிரதமா் மருத்துவமனைக்கோ அல்லது ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கோ சென்று பாா்வையிடவில்லை. தற்போது புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானப் பணிகளைப் பாா்வையிடுகிறாா். அவரது இந்தச் செயல் முன்யோசனையற்றது; உணா்வுபூா்மற்ாகும்’ என்றாா்.

64,500 சதுர மீட்டா் பரப்பில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு மத்தியில் நிறைவடையும். 2022-ஆம் ஆண்டு குளிா்க்காலக் கூட்டத் தொடா் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com