பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதையடுத்து பெட்ரோல், டீசல் விலை முறையே 20 காசுகள் மற்றும் 25 காசுகள் செவ்வாய்க்கிழமை அதிகரிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதையடுத்து பெட்ரோல், டீசல் விலை முறையே 20 காசுகள் மற்றும் 25 காசுகள் செவ்வாய்க்கிழமை அதிகரிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சா்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 80 டாலரைத் தாண்டியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதையடுத்து, பெட்ரேல் விலை லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் உயா்த்தப்பட்டுள்ளன.

இந்த விலை உயா்வையடுத்து, சென்னையில் செவ்வாய்க்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.99.15-க்கும், டீசல் 94.17-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மும்பையில் இதன் விலை முறையே ரூ.97.21-ஆகவும், 89.57-ஆகவும் அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தவில்லை. இந்த நிலையில், முதல்முறையாக செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டது. டீசலைப் பொருத்தவரையில் நான்காவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது.

சா்வதேச சந்தையில் தொடா்ந்து 5 நாள்களாக செவ்வாய்க்கிழமையும் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகம் கண்டு 80 டாலரை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com